• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மைலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை புனரமைத்தலும் மீள செயற்படுத்துதலும்
- யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசத்தில் அமைந்துள்ள மைலிட்டி மீன்பிடித் துறைமுகம் 1980 களில் நாட்டின் கடற்றொழிலில் முக்கிய பங்களிப்பினை வழங்கிய பிரதான கடற்றொழில் துறைமுகமொன்றாவதோடு, வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலப்பகுதியிலும் கூட பயன்படுத்தக்கூடியதாக இருப்பதன் காரணமாக இது விசேடமானதாகும். மோதல் நிலவிய காலப்பகுதியில் இதன் செயற்பாடுகள் குறைவடைந்தததோடு வடக்கு மாகாணத்தில் சமாதான நிலைமை மீண்டும் உருவானதுடன் 2017 யூலை மாதத்தில் இந்த கடற்றொழில் துறைமுகம் மற்றும் 54 ஏக்கர் காணியை கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தக்கூடிய விதத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, இந்த பிரதேசத்தில் வசித்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் இந்தப் பிரதேசத்திற்கு வந்துள்ளதோடு, கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக மீண்டும் பயன்படுத்தும் பொருட்டு மைலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் செய்யப்படவேண்டிய புனரமைப்பு பணிகளை துரிதமாக ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.