• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பாராளுமன்றத்தில் தற்போதுள்ள வலையமைப்பு உட்கட்டமைப்பு (Network Infrastructure) வசதிகளை விருத்தி செய்தல்
- இலங்கை பாராளுமன்றத்தின் அத்தியாவசிய நிருவாக பணிகள் மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகளுக்கு நவீன தொழினுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட வினைத்திறன் மிக்கதும் பயனுள்ளதுமான செயற்பாட்டு முறைகளை பயன்படுத்தும் தேவை கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மையின் மூலம் 'e - பாராளுமன்ற கருத்திட்டம்' நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன் போது தற்போதுள்ள கணனி வலையமைப்பு உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வது அத்தியாவசியமானதோடு இதற்குத் தேவையான உபகரணங்களையும் சேவைகளையும் வழங்குவதற்குப் பொருத்தமான கம்பனியொன்றை தெரிவு செய்யும் பொருட்டு அரசாங்கத்தின் கொள்வனவு வழிகாட்டலைப் பின்பற்றுவதற்காக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.