• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெருந்தோட்ட சமூகம் சார்ந்த வீதி உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்
- சுகாதாரம், கல்வி, பாதுகாப்பான நீர் போன்ற வசதிகள் உட்பட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை நோக்கி செல்வதில் காணப்படும் இடையூறு காரணமாக பெருந்தோட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலைக்குரிய சுட்டெண் நாட்டில் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது குறைந்த மட்டத்திலுள்ளது. ஆதலால் இந்த உட்கட்டமைப்பு வசதிகளை இலகுவாக அடைவதற்கு இயலுமாகும் வகையில் பெருந்தோட்டங்களின் வீதி அபிவிருத்தி பணிகளை விருத்தி செய்வது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, ஹட்டன் பிரதேசத்தில் Abbotsligh இலிருந்து Brobdack வரையில் செல்லும் வீதியை தார் இட்டு செப்பனிடும் பொருட்டு மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் யூ.பழனி திகம்பரம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.