• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Milk Fish (Chanos Chanos) என்னும் மீன் வளர்ப்பு பண்ணை கருத்திட்டத்திற்காக குத்தகை அடிப்படையில் காணி வழங்குதல்
- நாட்டின் பிரதான ஏற்றுமதி மீன் இனங்களான Tuna மற்றும் Bill Fish போன்ற மீன் வளங்களைப் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் நீளடுக்கு மீன்பிடி முறையின் போது கணவாய், Milk Fish மற்றும் சூடை போன்ற மீன் வகைகள் என்பன இரைக்காக பயன்படுத்தப்படும். இதற்கான வருடாந்தம் சுமார் 7,000 மெற்றிக் தொன் இரை தேவைப்பட்டாலும் இவற்றுள் உள்நாட்டில் பெற்றுக் கொள்ளப்படுவது சுமார் 3,000 மெற்றிக் தொன்களாகும். இரைக்காக பெருமளவு இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதன் காரணமாக நாட்டின் பிரதான ஏற்றுமதி மீன் வகைகளின் விலை அதிகரிப்பதோடு, இது இந்த உற்பத்திக்கு வௌிநாட்டு சந்தையில் போட்டி விலையினை நிர்ணயிக்கும் போது பிரதிகூலமான தாக்கத்தினைச் செலுத்துகின்றது.

இரைக்காகவும் அதேபோன்று மனித பாவனைக்காகவும் எடுக்கக்கூடிய Milk Fish (Chanos Chanos) மீன் வகையானது வர்த்தக மட்டத்தில் வளர்ப்பது மிக இலாபகரமானதோடு, இரைக்காக இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் செலவு செய்யப்படும் ஒரு பில்லியன் ரூபாவுக்கு மேலதிகமான தொகையிலிருந்து அந்நிய செலாவணி குறிப்பிட்ட அளவு இதன் மூலம் மீதப்படுத்த முடியுமாகும். இந்த Milk Fish (Chanos Chanos) மீன் வகைகளை முனைப்பார்ந்த முறையிலான பண்ணை கருத்திட்ட பிரேரிப்பொன்று அகில இலங்கை பல்தின மீன்பிடி படகு சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபை அரசாங்கத்தின் பங்களாராக செயற்படும் அரசாங்க - தனியார் என்னும் அடிப்படையின் கீழ் உரிய சுற்றாடல் தாங்கங்களை மதிப்பிடுவதற்கு உட்பட்டு, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு புத்தளம் மாவட்டத்தின் பங்கதெனியவிலுள்ள 12.14 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித் துண்டொன்றை இந்த சங்கத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.