• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொலைக்காட்சி நாடகம், திரைப்படம் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகளுக்கான வரி
- நாட்டினுள் கொண்டுவரப்படும் அதிகளவான மொழிமாற்றப்பட்ட வௌிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், வர்த்தக விளம்பரங்கள் காரணமாக உள்நாட்டு தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்படத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதகமான தாக்கத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சிங்களம் அல்லது தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்ட வௌிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், திறைப்படங்கள் மற்றும் வர்த்தக விளம்பரங்கள் என்பன மீது அறவிடப்படும் 'தொலைக்காட்சி நாடகம், திரைப்படம் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகளுக்கான வரியை' அதிகரிப்பதற்கு 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டது.
,
இதற்கமைவாக, உரிய வரியினைத் திருத்தி 2006 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வௌியிடப்பட்டுள்ள 2017‑11‑07 ஆம் திகதியிடப்பட்டதும் 2044/21 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.