• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டையில் 400 மெ.வொ. இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையமொன்றை தாபித்தல்
- இலங்கையில் வலுசக்தி உற்பத்தி துறைக்கான தோற்றுவாயொன்றாக இயற்கை வாயுவினை அறிமுகப்படுத்தும் முக்கியத்துவத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 400 மெ.வொ. இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையமொன்றை அரசாங்கத்துக்கு அரசாங்கம் என்னும் அடிப்படையில் சீன அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து அம்பாந்தோட்டையில் நிருமாணிப்பதற்கு பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. இவ்வாறு அம்பாந்தோட்டையில் நிருமாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கைத்தொழில் பேட்டைக்கு மின்சாரம் வழங்கும் அடிப்படை நோக்கிலும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய மின்சார பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காகவும் விசேட கருத்திட்டமொன்றாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைவாக சீன அரசாங்கத்தினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள China Machinery Engineering Corporation (CMEC) நிறுவனமும் இலங்கை மின்சார சபையும் கூட்டாக இந்த இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையத்தையும் இயற்கை வாயுவினை இறக்கும் முனைவிடமொன்றையும் நிருமாணிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.