• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக கல்லூரியொன்றை இலங்கையில் தாபிப்பதற்கு வசதியளித்தல்
- அறிவினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்திற்கு இலங்கையை மாற்றும் துரித பொருளாதார விருத்தியொன்றை அடைவதற்கு புதிய மற்றும் நிலைபேறுடைய நடவடிக்கைகளை எடுக்கும் தேவை அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக நாட்டின் ஆள் வலுவின் பண்பினை அதிகரிக்கும் பொருட்டு தேவையான அறிவு மற்றும் தொழில் தேர்ச்சியினை வழங்குவதற்கு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரியொன்றையும் வர்த்தக கல்லூரியொன்றையும் இலங்கையில் தாபிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக உலகில் கீர்த்திமிக்க பல்கலைக்கழகங்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பெறுபேறாக வர்த்தக கல்லூரியொன்றை இலாபமீட்டாத நோக்கத்தில் இலங்கையில் தாபிப்பதற்கு ஐக்கிய அமெரிக்காவின் கலிபோனியா பேர்க்கில் பல்கலைக்கழகத்தினால் பிரேரிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. உத்தேச வர்த்தக கல்லூரியை இந்து சமுத்திர வலயத்தில் மைய நிலையமொன்றாகத் தாபிப்பதற்கு இந்த பல்கலைக்கழகம் எதிர்பார்க்கின்றது. திறமை மற்றும் ஆற்றல் கொண்ட இருப்பினும் பொருளாதார கஷ்டங்களுடனான மாணவர்களுக்கு இங்கு கல்வி வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த வர்த்தக கல்லூரியை கம்பஹா மாவட்டத்தில் தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதன் ஆரம்ப திட்ட பணிகளுக்கு வசதிகளை செய்யும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினாலும் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.