• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பட்டப்பாட நெறிகளை கற்பதற்காக மாணவர்களுக்கு கடன் வழங்குதல்
- அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக பயன்படுத்தப்படும் வெட்டுப்புள்ளி முறை காரணமாக அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைக்கப்பெறாத மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கும் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்பாட நெறிகளை கற்பதற்காக 800,000/- ரூபா என்னும் உச்ச கடன் எல்லையின் கீழ் வட்டியற்ற சலுகை கடன் வசதிகளை வழங்கும் கருத்திட்டமொன்று 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைவாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைவாக அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியியல் பட்டத்தினை கற்பதற்காக க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த இளைஞர்களுக்கு அவர்களுடைய பொதுவான செலவுகளையும் தழுவும் விதத்தில் 1.1 மில்லியன் ரூபா வரை கடன் தொகையொன்றை வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, வேறு பட்டப்பாட நெறிகளை கற்கும் இளைஞர்களுக்கும் இந்த கடன் தொகையின் மூலம் தற்போது தழுவப்படும் பாடநெறி கட்டணங்கள் மற்றும் புத்தகங்களுக்கான செலவுகளுக்கு மேலதிகமாக ஏனைய பொதுவான செலவுகளுக்காக வருடமொன்றுக்கு 75,000/- ரூபா வீதம் சேர்ப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகையின் ஆகக்கூடிய பெறுமதி மூன்று வருட கால பட்டமொன்றுக்கு பத்து இலட்சத்து இருபத்தையாயிரம் (ரூபா 1,025,000/-) ரூபாவும் நான்கு வருட கால பட்டமொன்றுக்கு பதினொரு இலட்சம் (ரூபா 1,100,000/-) ரூபாவும் ஆக அதிகரிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.