• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 / 2018 பெரும் போகத்திற்குத் தேவையான பசளை விநியோகம்
- 2017 / 2018 பெரும் போகம் சார்பில் அரசாங்கத்தின் பசளைக் கம்பனிகளின் மூலம் விநியோகிக்கும் பொருட்டு தேவையான 72,000 மெற்றிக் தொன் யூரியா கொள்வனவு செய்வதற்கான கேள்வியை இதன் சார்பில் வெற்றிகரமான கேள்வியினை முன்வைத்துள்ள JAT Holding (Pvt.) Ltd. கம்பனிக்கு மெற்றிக் தொன் ஒன்று 327.40 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் 23.57 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.