• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டதும் தடை செய்யப்பட்டதுமான பொருட் பட்டியலுக்கும் ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்ட பொருட் பட்டியலுக்குமான ஒழுங்குவிதி
- இலங்கை 1968 ஆம் ஆண்டிலிருந்து உலக சுங்க அமைப்பின் உறுப்புரிமையை கொண்டுள்ளதோடு, வர்த்தக பொருட்களின் விபர குறிப்பும் வகுப்பீடு இலக்கக் குறியீட்டு முறையும் தொடர்பிலுள்ள சர்வதேச சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் கட்டுப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தக போக்கினதும் தொழினுட்பத்தின் சிறிய மாற்றங்களுக்கும் அமைவாக புதிய வகுப்பீடு இலக்கக் குறியீட்டு முறையை இற்றைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதற்கமைவாக தேசிய சுங்க குறியீட்டு இலக்க முறையானது 8 இலக்கங்களைக் கொண்ட திருத்தியமைக்கப்பட்ட வகுப்பீட்டு குறியீட்டு முறையொன்றாக திருத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டதும் தடை செய்யப்பட்டதுமான பொருட் பட்டியல் மற்றும் ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்ட பொருட் பட்டியல் சம்பந்தமாக ஒழுங்குவிதி 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வௌிப்படுத்தப்பட்டுள்ள ஒழுங்குவிதியினை (கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பொருட்கள்) திருத்த வேண்டியுள்ளது. இதற்கமைவாக, இந்த ஒழுங்கு விதிகளை திருத்தி வௌியிடப்பட்டுள்ள 2017-11-09 ஆம் திகதியிடப்பட்டதும் 2044/40 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலையும் 2017-11-09 ஆம் திகதியிடப்பட்டதும் 2044/41 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலையும் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.