• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இரண்டாம் கட்டத்தின் நிருமாணிப்பு
- பொலன்நறுவை மாவட்ட பொது வைத்தியசாலை இந்த பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிகிச்சை சேவைகளை வழங்கும் பிரதான வைத்தியசாலையாகும். விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளை வழங்க வேண்டிய நோயாளிகளுக்கு இந்த வைத்தியசாலையில் தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லாமையினால், இதன் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவினை நிருமாணிக்கும் பணிகள் 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது கட்டமாக இரண்டு மாடிகளின் நிருமாணிப்பு பணிகள் முடிக்கப்பட்டு கையளிக்கும் நிலையில் உள்ளது.

இதற்கமைவாக, இதன் இரண்டாவது கட்டத்தின் கீழ் செய்யப்படவுள்ள நிருமாணிப்பு பணிகளை துரிதமாக ஆரம்பிக்கும் தேவையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த நிருமாணிப்பு பணிகளை வடிவமைத்து, நிருமாணிக்கும் அடிப்படையில் 643.36 மில்லியன் ரூபாவைக் கொண்ட வரியுடனான தொகைக்கு மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கும் Engineering Services (Pvt.) Ltd., கம்பனிக்கும் கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.