• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் கடமைகளுக்காக இணைக்கப்படவுள்ள விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகளுக்குத் தேவையான 06 இராணுவ வாகனங்களை கொள்வனவு செய்தல்
- ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் கடமைகளுக்காக இணைக்கப்படவுள்ள விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த குழுக்களுக்குத் தேவையான வாகனங்கள் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்கீழ் உத்தேச நிகழ்ச்சித்திட்டத்திற்கு பயன்படுத்துவதற்குத் தேவையான 06 இராணுவ வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு கேள்வி கோரப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இராணுவ வாகனமொன்று 68.93 மில்லியன் ரூபா வீதம் 06 வாகனங்களை 413.59 மில்லியன் ரூபாவைக் கொண்ட வரியுடனான தொகைக்கு M/s. Securatec Lanka (Pvt.) Ltd. கம்பனியிடமிருந்து கொள்வனவு செய்யும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.