• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் எரிபொருள் வழங்கல் தொகுதியொன்றை நிருமாணித்தல் மற்றும் விமான எரிபொருள் முனைய வசதிகளை மேம்படுத்தல்
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் II ஆம் கட்டத்தின் அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக நடைமுறைப்படுத்தப்படும் உத்தேச புதிய விமான கையாள்கை பகுதி E முனைவிடத்தின் எரிபொருள் வழங்கல் தொகுதியொன்றை நிருமாணித்தல் மற்றும் விமான எரிபொருள் முனைய வசதிகளை மேம்படுத்தல் கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை M/s. WEC Engineers and Contractors Pte Ltd., Singapore, PT Wijaya Karya (Persero) Tbk மற்றும் China National Chemical Engineering ஆகிய நிறுவனங்களின் கூட்டு தொழில் முயற்சிக்கு 51.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட வரியற்ற தொகைக்கு வழங்குவதற்கும் இதற்கு தேவையான நிதியிடல் வசதிகளை செய்து கொள்வதற்குமாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.