• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அச்சகத்தை புதிய தொழினுட்பத்திற்கு அமைவாக விருத்தி செய்தல்
- ஆண்டொன்றில் அண்ணளவாக 270 பரீட்சைகளை நடாத்துவதற்கு தேவையான வினாத்தாள்கள் மற்றும் ஆவணங்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அச்சகத்தின் ஊடாக அச்சிடப்படுகின்றதோடு, இதற்காக பயன்படுத்தப்படும் பெரும்பாலான இயந்திரங்கள் 30 வருடங்களுக்கு மேலாக பழைமை வாய்ந்தவையாகும். புதிய தொழினுட்ப வழிமுறைகளை இதற்காக அறிமுகப்படுத்துவன் மூலம் பரீட்சைகளில் இரகசியத் தன்மையை உச்ச அளவில் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதோடு, இதனால் பரீட்சைகள் தொடர்பில் பரீட்சார்த்திகளின் நம்பிக்கையும் அதிகரிக்கும். இதற்காக பரீட்சைகள் திணைக்களத்தின் அச்சகம் சார்பில் டிஜிட்டல் அச்சு தொழினுட்பத்தினை பயன்படுத்துவதன் மூலம் விருத்தி செய்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, டிஜிட்டல் அச்சு தொழினுட்பத்தை அறிமுகப்படுத்துவன் மூலம் பரீட்சைகள் திணைக்களத்தின் அச்சகத்தை விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 2.9 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கும் 15 மில்லியன் ரூபாவைக் கொண்ட வரியற்ற தொகைக்கும் M/s. Metropolitan Office (Pvt.) Ltd. நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.