• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'இலங்கை தேயிலைக்கான' உலக ஊக்குவிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- இலங்கை தேயிலை சார்பில் 'Ceylon Tea' என சர்வதேச சந்தையில் தற்போது நிலவும் கேள்வியை பேணுதல், இழந்த சந்தைகளை சுத்தமான 'Ceylon Tea' என்னும் நற்பெயரை மீளக்கட்டியெழுப்புதல் சர்வதேச சந்தையில் இலங்கையின் தேயிலை அடையாளத்தை நிலைநாட்டுதல் என்பவற்றை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இலங்கை தேயிலைச் சபையினால் 'Ceylon Tea' சார்பில் உலகளாவிய ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடக பிரசார நடவடிக்கைகளைத் திட்டமிடுதல், அட்டவணைப்படுத்துதல் மற்றும் கொள்வனவு செய்தல் சம்பந்தமாக மதியுரைசேவை முகவர் நிறுவனமொன்றை தெரிவு செய்வதற்கு அரசாங்க கொள்வனவு நடவடிக்கை முறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் உரிய மதியுரைச்சேவை நிறுவனமாக Dentsu Grant (Pvt.) Ltd. கம்பனியை 219.89 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த தொகைக்கு மூன்று (03) வருட காலத்திற்கு நியமித்து கொள்ளும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.