• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொரளை, எலியட் பிளேசில் நடுத்தர வருமான வீடமைப்பு கருத்திட்டம்
- பொரளை, எலியட் பிளேசில் நிருமாணிக்கப்படவுள்ள 400 வீட்டு அலகுகளைக் கொண்ட நடுத்தர வருமான வீடமைப்பு கருத்திட்டத்தை வடிவமைத்து நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை இது சம்பந்தமாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 7,799 மில்லியன் ரூபாவைக் கொண்ட வரியற்ற தொகைக்கு M/s. Yanjian Group Company Limited கம்பனிக்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.