• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திரிபோஷ உற்பத்திக்குத் தேவையான முழுஆடை பால்மா கொள்வனவு
- 'திரிபோஷ' என்னும் போது போசாக்கு குறைபாடுடைய குழந்தைகளுக்கு, போசாக்கு பிரச்சினையுடைய கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் பணம் அறவிடாது வழங்கப்படும் போசாக்கு நிறைந்த பரிபூரண உணவொன்றாகும். முழுஆடை பால்மா திரிபோஷ உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் பிரதான மூலப்பொருளாவதோடு, 2014 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டுவரை இந்த பால்மா Milco (Pvt.) Ltd கம்பனியினால் வழங்கப்படுகின்றது.

உள்நாட்டில் பால்மா உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அரசாங்க கம்பனியொன்றான Milco (Pvt.) Ltd கம்பனியிடமிருந்து தொடர்ந்தும் பால்மா கொள்வனவு செய்வதன் மூலம் உள்நாட்டு பாற்பண்ணையாளர்களின் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு வழங்கக்கூடிய பங்களிப்பு மற்றும் இடையீட்டாளர்கள் இன்றி நேரடியாக கொள்வனவு செய்யும் சாதகமான நிலைமை என்பன பற்றி கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 2018 ஆம் ஆண்டில் திரிபோஷ உற்பத்திக்குத் தேவையான 600 மெற்றிக்தொன் முழுஆடை பால்மாவை 486 மில்லியன் ரூபாவைக் கொண்ட வரியற்ற விலைக்கு இந்த கம்பனியிடமிருந்து கொள்வனவு செய்யும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.