• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வைத்தியசாலைகளின் நிருமாணிப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துதல்
- வைத்தியசாலைகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பொது கொள்வனவு நடவடிக்கை முறையை பின்பற்றும் போது நிகழும் கால தாமதத்தை தடுப்பதற்கு குறித்த சில நிருமாணிப்பு பணிகளை அரசாங்க நிருமாணிப்பு நிறுவனங்களுக்கு கையளிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பொன்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் வாய் சுகாதார பிரிவினை நிருமாணித்தல், அம்பாறை பொது வைத்தியசாலையில் விசேட சிறுவர் காவறைத் தொகுதியை நிருமாணித்தல், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதியை நிருமாணித்தல் ஆகியவற்றின் நிருமாணிப்பு பணிகளை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்துக்கும் Central Engineering Services (Pvt.) Ltd. கம்பனிக்கும் கையளிப்பதற்கும் ஹொரண ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக் கூடத்துடன் ஆறு (06) மாடிக் கட்டடமொன்றை நிருமாணிக்கும் பணிகளை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு கையளிப்பதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.