• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஏற்றுமதி பயிர்கள் கிராமங்கள் கருத்திட்டம்
- கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள பயனுள்ள நோக்கங்களுக்காக தற்போது பயன்படுத்தப்படாதுள்ள அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை மீண்டும் பயிர்ச் செய்வதற்கோ அல்லது ஏற்றுமதியை நோக்காகக் கொண்டு பயிர்ச் செய்கைக்கோ பயன்படுத்தக்கூடிய விதத்தில் உபயோகிக்கும் தேவை கண்டி நகர அபிவிருத்தி தொடர்பிலான அமைச்சர்கள் குழுவினால் இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, "ஏற்றுமதி பயிர்கள் கிராமங்கள் கருத்திட்டம்" என்னும் பெயரில் கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் மெததும்பர பிரதேச செயலகப் பிரிவின் வூட்சைட் தோட்டத்தில் இதற்காக ஏற்றதென இனங்காணப்பட்டுள்ள 400 ஏக்கர் காணியை உரிய தகுதிவிதிகளைப் பின்பற்றி தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கும் இந்தக் காணிகளில் கமத்தொழில் நடவடிக்கைகளை செய்வதற்குத் தேவையான தொழினுட்ப உதவிகளை வழங்குவதற்கும் இதன் வெற்றியின் மீது கருத்திட்டத்தின் பணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்குமாக விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சரும் கண்டி நகர அபிவிருத்தி தொடர்பான அமைச்சர்கள் குழுவின் தலைவருமான (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.