• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக வசதிபடுத்தல் பற்றிய உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கையின் கடப்பாறு சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தல்
- வர்த்தகம் மற்றும் சுங்கத் தீர்வை தொடர்பிலான பொது இணக்கப்பாட்டின் சருவதேச வர்த்தக வசதிப்படுத்தல் தொடர்புபட்ட பிரிவுகளை தௌிவுபடுத்துவதற்கும் அதேபோன்று பொருட்களை கொண்டு செல்லல், விநியோகித்தல் உட்பட இசைவாக்கமளித்தல் போன்ற பணிகளின்பால் உள்ள தடைகளை நீக்கும் நோக்கினை கொண்டு வசதியளித்தல் இருதரப்பு உடன்படிக்கையொன்றாக வர்த்தக வசதியளித்தல் உடன்படிக்கை (Trade Facilitation Agreement - TFA) செய்யப்பட்டுள்ளது. நாட்டு எல்லையின் ஊடாக பொருட்களை கொண்டு செல்லல், விநியோகித்தல் மற்றும் இசைவாக்கத்தினை துரிதப்படுத்துதல் இந்த உடன்படிக்கையின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை இந்த உடன்படிக்கையில் ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ளதோடு, இதன்கீழான இலங்கையின் பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் உலக வர்த்தக வசதியளித்தல் சுண்டெண்ணில் இலங்கையின் இடத்தை உயர்த்துதல், சருவதேச வர்த்தக செலவினை குறைத்துக் கொள்தல், சருவதேச வர்த்தக சந்தையில் போட்டிகரமாக மாறுதல் போன்ற பல நலன்கள் அடையமுடியுமாகும்.

இதற்கமைவாக, இதற்குரிய பணிகளை ஒருங்கிணைப்பதற்காக வர்த்தக வசதிப்படுத்தல் பற்றிய தேசிய குழுவொன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது. வர்த்தக வசதிப்படுத்தல் உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடுகளுக்கு புறம்பான ஏனைய நேரடி வர்த்தக வசதியளித்தல் பணிகளையும் உள்ளடக்கி இந்த குழுவின் பணிகளை விரிவுபடுத்துவதற்கும் உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக வசதியளித்தல் உடன்படிக்கையின் கடப்பாட்டுக்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதற்காக பணித் திட்டமொன்றைத் தயாரிப்பதற்குமாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினாலும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.