• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் பைனஸ் வன செய்கையை உள்நாட்டு மர வகைகளுடன் கூடிய வன வளர்ப்பாக மாற்றியமைத்தல்
- கடதாசி கைத்தொழிலில் மூலப்பொருளொன்றாக பயன்படுத்தும் அத்துடன் நீரேந்து பிரதேசங்களில் குறைந்த மட்டத்தில் காணப்படும் காணிகளுக்கு கூரையாக இருக்கும் நோக்கில் 1960-1990 காலப் பகுதிக்குள் இலங்கையில் பைனஸ் வனச் செய்கையானது ஆரம்பிக்கப்பட்டது. தற்போது சுமார் 16,000 ஹெக்டயார் பைனஸ் வனச் செய்கை இலங்கையின் ஈர மற்றும் இடைப்பட்ட வலயங்களில் காணக்கிடைக்கின்றது. இவற்றில் மலைநாட்டு பிரதேசங்களிலுள்ள பைனஸ் வனச் செய்கையில் இடையீட்டு பயிர்ச்செய்கை காணக்கிடைக்காமையின் விளைவாக நீரேந்து பிரதேசங்களில் பாதுகாப்புக்கு இந்த வனச் செய்கையின் மூலம் கிடைப்பது குறைந்த பங்களிப்பாகும்.

ஆதலால், நீரேந்து பிரதேசங்களில் சுற்றாடல் பாதுகாப்பு சார்பில் செய்கை பண்ணப்பட்ட பைனஸ் வனச் செய்கைக்கு அண்மையில் உள்நாட்டு மர வகைகளை செய்கை பண்ணுவதன் மூலம் இடையீட்டுச் செய்கையை விருத்தி செய்வதற்கான கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்த பிரேரிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இந்த வனச் செய்கையின் மண் மற்றும் நீர் பாதுகாப்பினை அதிகரிப்பதற்கும் உயிரின பல்வகைமையை விருத்தி செய்வதற்கும் இயலுமாக்கும். இந்த கருத்திட்டத்தை வன நிலைபேறுடைய முகாமைத்துவம் மற்றும் புனரமைப்பு பற்றிய ஆசிய பசுபிக் வலையமைப்பின் மூலம் வழங்கப்படும் நிதி உதவியின் கீழ் எதிர்வரும் மூன்று (03) வருட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.