• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கடலோர ரோந்து கப்பலொன்றைப் பெற்றுக் கொள்ளல்
- அண்ணளவாக 517,000 சதுர கிலோ மீற்றர் கொண்ட இலங்கைக்குரிய கரையோரத்தில் இலங்கையின் சமுத்திர சட்டத்தை அமுல்படுத்தும் பணியானது இலங்கை கரையோர திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டின் தெற்கு கரையோரத்திலிருந்து கடல் மைல் ஐந்துக்கு அப்பால் சந்தடிமிக்க சர்வதேச பயணவழி இருப்பதாலும் சமுத்திர பயங்கரவாதம், போதைப்பொருள் வர்த்தகம், மனித வர்த்தகம், கொள்ளை, சட்டவிரோதமாக மீன் பிடித்தல் போன்ற சவால்கள் அதிகரித்துள்ளதன் காரணத்தினாலும் கரையோர பாதுகாப்பு பணிகளுக்குத் தேவையான ரோந்து கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அத்தியாவசியமானதாகும்.

இதற்கமைவாக, இந்திய அரசாங்கத்திடம் செய்யப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்திய கரையோர திணைக்களத்தினால் பயன்படுத்தப்பட்ட "வருண" என்னும் கடலோர ரோந்து கப்பலை இலங்கை கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு பணம் அறவிடாது வழங்கப்படுவதோடு, இந்த திணைக்களத்தின் சமுத்திர ரோந்து ஆற்றலை விருத்தி செய்வதற்கு இது ஏதுவாய் அமையும். இந்த கப்பலானது கொடையொன்றாக ஏற்றுக் கொள்வது சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.