• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கலாசார கொள்கையொன்றினை வலுவூட்டுதல்
- நாடொன்றின் பொது மக்களின் கூட்டான உணர்வு நிலையை உருவாக்குவதன்பால் கலாசாரதுறை, கல்வித்துறை, ஊடகத்துறை மற்றும் மதம் என்பன நேரடியாக பாதிக்கும் காரணிகளாகும். இவற்றுள் சமூகநலன் சம்பந்தமாக முக்கிய பணியினை நிறைவேற்றுவதில் கலை - கலாசாரதுறை பிரதானமானதாகும். புதிய கலை மற்றும் கலாசார கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கையில் புதிய கலாசார புத்துயிர் அளிப்பின் பொருட்டு புகழ்பெற்ற கலைஞர்களும் கல்விமான்களும் ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

கலை மற்றும் கலாசாரத்திற்குரியதாக நாட்டு மக்களின் நோக்கு, புரிந்து கொள்தல் மற்றும் பயன்பாட்டினை விரிவுபடுத்துதல் என்பவற்றின் மூலம் கலாசார ரீதியில் ஒவ்வொருவரும் ஏனைய சமூகத்தினருடன் இணைந்த பிரசையொருவரை உருவாக்குவதற்குத் தேவையான பின்னணியைக் கட்டியெழுப்புவதற்கு இயலுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக உரிய நிறுவனங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்புடன் இதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக கலாசார புத்துயிரூட்டல் தேசிய வழிநடத்தல் பிரிவொன்றை சனாதிபதி செயலகத்துடன் இணைத்து தாபிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.