• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"மஹாசூப்பவங்சய" ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்தல்
- இலங்கை வளர்ச்சி கண்ட உணவு கலாசாரத்திற்கு உரிமை கோரும் நாடொன்றாவதோடு, முன்னைய காலத்தில் நாட்டில் காணப்பட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறை இந்த உணவு கலாசாரத்தின் பாரிய பங்களிப்பாக கூறலாம். இலங்கை உணவு கலாசாரம் மற்றும் அதன் வரலாற்று ரீதியிலான வளர்ச்சி பற்றி விபரிக்கும் "மஹாசூப்பவங்சய" என்னும் பெயரில் பெறுமதி வாய்ந்த நூலொன்று தேசபந்து (கலாநிதி) ரீ.பப்லிஸ் சில்வாவினால் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்விமான்கள் ஒருசிலரின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்ப்பதன் மூலம் இந்த துறை சம்பந்தமான இலங்கையின் அறிவு மற்றும் உரிமையை உலகத்திற்கு கொண்டு செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இதற்கமைவாக "மஹாசூப்பவங்சய" நூலை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்து அதன் 1,000 பிரதிகளை அச்சிடுவதற்கு நிதி வழங்குவதன் மூலம் நிதி வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.