• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சித்திரவதை, பிறகொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் செயற்பாட்டிற்கு அல்லது தண்டனைக்கு எதிரான விருப்புரிமை உபசரணைக்கு இணங்குதல்
- இலங்கை 1984 ஆம் ஆண்டில் சித்திரவதை, பிறகொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் செயற்பாட்டிற்கு அல்லது தண்டனைக்கு எதிரான விருப்புரிமை உபசரணைக்கு கைச்சாத்திட்டுள்ளதோடு, 1994 ஆம் ஆண்டில் இந்த உபசரணையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இந்த நாட்டிலுள்ள சட்டங்களின் ஊடாக வலுவூட்டப்பட்டது.

சித்திரவதையை தடுப்பதற்கும் அதற்காக தேசிய மற்றும் சருவதேச பொறிமுறைகளுடன் ஒத்துழைப்பு வழங்கி செயலாற்றுவதற்குமான அரசாங்கத்தின் உண்மைத்தன்மையையும் நோக்கத்தையும் எடுத்துக் காட்டி இந்த உபசரணையின் கீழான விருப்புரிமை உபசரணைக்கு இலங்கை கைச்சாத்திடுவதற்கும் இந்த கடப்பாட்டுக்கு அமைவாக தடுப்பு நிலையங்களை முறையான மேற்பார்வைக்கு உட்படுத்தும் அத்துடன் நீதிமன்ற கட்டளை அல்லது வேறு விதத்தில் தடுத்து வைத்துள்ளவர்களின் நலனோம்பலை விருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.