• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க மற்றும் தனியார் பங்குடமையின் மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை விருத்தி செய்வதற்குரியதாக கைச்சாத்திடப்பட்டுள்ள சலுகை உடன்படிக்கையைத் திருத்துதல்
- அரசாங்க மற்றும் தனியார் பங்குடமையின் மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை விருத்தி செய்வதற்குரியதாக இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை சனநாயக சோசலிச குடியரசு, China Merchant Port Holdings Company Limited, அம்பாந்தோட்டை International Port Group (Private) Limited கம்பனி மற்றும் அம்பாந்தோட்டை International Port Services Company (Private) Limited கம்பனி என்பன 2017 07 29 ஆம் திகதியன்று சலுகை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இந்த சலுகை உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட திகதியிலிருந்து 180 நாட்களுக்குள் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முன் நிபந்தனைகள் உரிய தரப்பினர்களினால் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதோடு, அதற்குரிய பணிகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.

உடன்படிக்கையில் 4.2 ஆம் பிரிவிற்கு அமைவாக முன் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் CM Port அல்லது அதன் துணை நிறுவனமொன்றினால் அவற்றின் 'முதலீட்டுப் பெறுமதியை' இலங்கை அரசாங்கத்திற்கு பின்வருமாறு செலுத்துதல் வேண்டும்:

i. பிணை வைப்பாக 5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் ஏற்கனவே விசேட கணக்கொன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படும் திகதியன்றில் இந்த தொகையானது இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு மாற்றப்படுதல் வேண்டும்.

ii. உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படும் திகதியிலிருந்து ஒரு (01) மாத காலத்திற்குள் பிணை வைப்பை கழித்துக் கொண்டதன் பின்னர், மீதி முதலீட்டு பெறுமதியின் 10 சதவீதம் (தவணை 01) செலுத்தப்படுதல் வேண்டும்

iii. உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படும் திகதியிலிருந்து மூன்று (03) மாத காலத்திற்குள் முதலீட்டு பெறுமதியின் 30 சதவீதம் (தவணை 02) செலுத்தப்படுதல் வேண்டும்.

iv. உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படும் திகதியிலிருந்து ஆறு (06) மாத காலத்திற்குள் முதலீட்டு பெறுமதியின் மீதி 60 சதவீதம் (தவணை 03) செலுத்தப்படுதல் வேண்டும்

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் மீது CM Port நிறுவனத்தினால் அதன் 'முதலீட்டுப் பெறுமதியை' செலுத்தும் திகதியை முன்கொணர்வதற்கும் உடன்படிக்கை செயற்பட ஆரம்பிக்கப்படும் திகதியன்றில் செலுத்தப்படும் தொகையை அதிகரிப்பதற்கும் பின்வருமாறு உடன்பாடு காணப்பட்டுள்ளது:

i. உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படும் திகதியன்றிலிருந்து பிணை வைப்பை கழித்துக் கொண்டதன் பின்னர், மீதி முதலீட்டு பெறுமதியின் 30 சதவீதத்தை (தவணை 01) செலுத்துதல் .

ii. உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படும் திகதியிலிருந்து ஒரு (01) மாத காலத்திற்குள் முதலீட்டு பெறுமதியின் 10 சதவீதத்தை (தவணை 02) செலுத்துதல் .

iii. உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படும் திகதியிலிருந்து ஆறு (06) மாத காலத்திற்குள் முதலீட்டு பெறுமதியின் மீதி 60 சதவீதத்தை (தவணை 03) செலுத்துதல் .

இதற்கமைவாக, மேற்குறிப்பிட்டவாறு உரிய கொடுப்பனவுகளை செய்வதற்கு இயலுமாகும் வகையில் சலுகை உடன்படிக்கையில் உரிய பிரிவுகளைத் திருத்துவதற்கும் இதற்காக மேலதிக உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவ தற்குமாக துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.