• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகாவலி E வலயத்தை இலங்கை மகாவலி அதிகாரசபையின் விசேட அதிகார பிரதேசமாக பிரகடனப்படுத்துதல்
- விக்டோரியா, ரந்தெனிகல, ரன்தெம்பே ஆகிய சரணாலயங்களின் கிழக்கு எல்லையில் மினிப்பே இடதுகரை கால்வாய்க்கு இடதுபக்கமாக அமைந்துள்ள பிரதேசத்தில் சுமார் 20,000 குடும்பங்கள் 40 வருடங்களுக்கு மேலாக நிரந்தரமாக வசிக்கின்றனர். இந்த பிரதேசத்திற்கு அபிவிருத்தி திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் அதன் அபிவிருத்தி மற்றும் நிருவாக அதிகாரங்கள் இலங்கை மகாவலி அதிகாரசபைக்கு கையளிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளதோடு, இதற்கு உரிய வனசீவராசிகள் ஒதுக்கங்களின் எல்லைகளை மீள நிர்ணயிக்கவேண்டியுள்ளது.

இதற்கமைவாக, மினிப்பே இடதுகரை கால்வாயை புனரமைக்கும் விசேட அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக மினிப்பே மற்றும் வில்கமுவ பிரதேச செயலகப் பிரிவுகளுக்குரிய இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்களை மகாவலி E வலயமாக மகாவலி அபிவிருத்தி அதிகார பிரதேசமொன்றாக வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் பிரகடனப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினாலும் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.