• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு 2017/2018 ஆம் ஆண்டிற்குத் தேவையான உராய்வு நீக்கி எண்ணெய்களை (Lubricating Oil) கொள்வனவு செய்தல்
- இலங்கை மின்சார சபையின் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் 18 மெகாவொட் ஆற்றலைக் கொண்ட 04 மின் பிறப்பாக்கி இயந்திரங்களையும் 10 மெகாவொட் ஆற்றலைக் கொண்ட 08 மின் பிறப்பாக்கி இயந்திரங்களையும் கொண்டுள்ளது. இந்த மின் பிறப்பாக்கி இயந்திரங்களுக்கு 2017/2018 ஆம் ஆண்டிற்குத் தேவையான இருப்பினும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டாத வகைகளைச் சேர்ந்த உராய்வு நீக்கி எண்ணெய் (Lubricating Oil) 1.1 மில்லியன் லீற்றர்களை கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினது சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உராய்வு நீக்கி எண்ணெய் லீற்றர் ஒன்று 234.43 ரூபா வீதம் M/s.Chevron Lanka PLC நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினாலும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.