• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகத்தை சட்டபூர்வமாக்குவதற்காக சட்டமூலமொன்றை தயாரித்தல்
- மோதல் நிகழ்ந்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட அத்துடன் சொந்த விருப்பத்தில் சரணடைந்த தவறாக வழிநடத்தப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகமானது 2006 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. தவறாக வழிநடத்தப்பட்ட போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் போது இந்த பணியகத்தினால் அடையப்பெற்ற வெற்றியினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும் பொறுப்பும் இந்த பணியகத்திற்கு கையளிக்கப்பட்டதோடு, தற்போது போதைப்பொருளுக்கு அடிமையான சுமார் 1,774 பேர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற கட்டளையின் மீது புனர்வாழ்வளிப்பதற்காக ஆற்றுப்படுத்தப்படும் தவறாக வழிநடத்தப்பட்ட போராளிகள், தீவிரவாதிகள் அல்லது அழிவு செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் உட்பட நஞ்சு மருந்துப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் ஆகியோர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்துவதற்கும் அவர்கள் சம்பந்தமான பின்னூட்டல்களை செய்வ தற்குமான ஏற்பாடுகளை செய்து புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் பணியகத்தை பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் முறையாக தாபிக்கும் பொருட்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.