• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் புத்தஜயந்தி புத்தக நிலையத்தின் விற்பனை செயற்பாடுகளை மேம்படுத்துதல்
- பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் எழுதப்படும் சுருக்க திரிபீடக நூல், பௌத்த கலைக்களஞ்சியம் உட்பட பிற சிங்கள மற்றும் ஆங்கில பௌத்த நூல்கள் இந்த திணைக்களத்தின் புத்தஜயந்தி புத்தக நிலையத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. பௌத்த மதம், பௌத்த தத்துவம் சம்பந்தமாக கற்கும் உள்நாட்டு வௌிநாட்டு நிபுணர்களினதும் வாசகர்களினதும் வசதி கருதி இந்த நூல்களை சலுகை விலையில் விற்பனை செய்யும் முக்கியத்துவத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, விற்பனை செய்யும் தெரிவு செய்யப்பட்ட வௌியீடுகளுக்கு விலைக் கழிவு வழங்கும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.