• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தை உத்தரவாதத்தால் வரையறுக்கப் பட்ட முழு அரசுடமையான தனியார் கம்பனியொன்றாக தாபித்தல்
- முழு உரிமையும் அரசுடமையாக 1982 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தினால் பிரதானமாக அரசாங்கத்தின் வர்த்தக விளம்பர பணிகளும் நிகழ்ச்சி முகாமைத்துவ பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஏனைய வர்த்தக விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சி முகாமைத்துவ நிறுவனங்களுடன் போட்டிகரமாக செயலாற்றி வினைத்திறன் மிக்க வர்த்தக நிறுவனமொன்றாக நிலையான தன்மையை கட்டியெழுப்புவதற்கு இந்த நிறுவனத்திற்கு இயலுமாகும் வகையில் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு முழு உரிமையும் உடைய உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட தனியார் கம்பனியொன்றாக செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தை தாபிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது