• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் விஞ்ஞானம் மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்துகொள்ளல்
- பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக விஞ்ஞான, ஆராய்ச்சி மற்றும் தொழினுட்ப துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பினை மேம்படுத்தும் நோக்கில், இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. 2017 திசெம்பர் 07 ஆம் 08 ஆம் திகதிகளில் தென் ஆபிரிக்காவில் நடாத்தப்படும் விஞ்ஞான மாநாட்டின் போது இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.