• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மலைநாட்டு புகையிரதப் பாதையுடன் தொடர்புபட்ட உறுதியற்ற சாய்வுகள் மற்றும் மண் சரிவுகளின் மறுசீரமைப்பு
- கடந்த காலப்பகுதிக்குள் நிகழ்ந்த மண்சரிவுகள் காரணமாக ஏற்பட்ட தாக்கங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மலைநாட்டு புகையிரதப் பாதையின் தொழிற்பாட்டுப் பணிகளை தடையின்றியும் பாதுகாப்பாகவும் செய்யும் நோக்கில் இந்த புகையிரத பாதையின் உறுதியற்ற சாய்வுகள் மற்றும மண்சரிவுக்கு உட்படக்கூடிய இடங்களை உறுதிப்படுத்தும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் தேவை தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்பினால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, மலைநாட்டு புகையிரதப் பாதையின் ரம்புக்கனை மற்றும் பதுளைக்கு இடைப்பட்ட பிரதேசத்திற்கு முன்னுரிமை வழங்கி மண்சரிவு அபாயம் மிக்க இடங்களையும் உறுதியற்ற சாய்வுகளையும் மறுசீரமைக்கும், அத்துடன் வடிகால் முறைமையை விருத்தி செய்யும் உத்தேச கருத்திட்டத்தை எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதிக்குள் தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்பும் இலங்கை புகையிரத திணைக்களமும் இணைந்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினாலும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.