• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆபத்தான கழிவுகள் மற்றும் இரசாயன பதார்த்தங்களை முகாமிப்பதற்கு ஒன்றிணைந்த வழிமுறையொன்றைத் தயாரித்தல்
- துரித கைத்தொழில் மயமாக்களினால் அதிகரித்து வரும் இரசாயன பொருள் பாவனை காரணமாக மனித சுகாதாரத்திற்கும் சுற்றாடலுக்கும் ஏற்படும் பாதிப்பினை குறைப்பதற்கு பெரும்பாலான நாடுகளின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்குரியதாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட Basel சமவாயம், Stockholm சமவாயம், Rotterdam சமவாயம் மற்றும் Minamata சமவாயம் போன்ற சருவதேச சமவாயங்களில் இலங்கையும் ஒரு தரப்பாகவுள்ளது.

இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு கைத்தொழில் சார்ந்த முதலீடுகளை ஊக்குவிக்கும் போது சுற்றாடலுக்கு தீ்ங்கு விளைவிக்காதவாறு இரசாயன பொருட்கள் பாதுகாப்பாக பயன்படுத்தப்படுகின்றமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, உரிய சகல தரப்பினர்களினதும் பங்குபற்றுதலுடன் இலங்கையில் ஆபத்தான கழிவுகள் மற்றும் இரசாயன பதார்த்தங்களை முகாமிப்பதற்கான தேசிய கொள்கையொன்றையும் அதனை நடைமுறைப்படுத்து வதற்கு முறையான வழிமுறையொன்றையும் தயாரிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.