• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை மாவட்ட செயலகத்தின் நான்கு மாடி கட்டடத்தின் மீதி நிருமாணிப்பு வேலைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- பொலன்நறுவை பிரதேச செயலகத்திற்கு நான்கு மாடி கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அதன் முதலாம் கட்டத்திற்கான நிருமாணிப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் Micro Construction (Pvt) Ltd. நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதுடன், இந்த நிருமாணிப்பு வேலைகள் முடிவுறும் மட்டத்தில் உள்ளன.

இந்த நிருமாணிப்பு பணிகளின் முன்னேற்றத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அதன் இரண்டாம் கட்டத்திற்கான நிருமாணிப்பு வேலைகளை 952.90 மில்லியன் ரூபாவை (வரியின்றி) கொண்ட தொகைக்கு இதே கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.