• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசியலமைப்பின் 105(1)(இ) ஆம் உறுப்புரையின் கீழ் மேல் நீதிமன்றமொன்றைத் தாபித்தல்
- நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் பெருமளவில் வழக்குகள் குவிந்துள்ளமை காரணமாக நிதி மோசடி, ஊழல், அரசாங்க சொத்துக்கள் மற்றும் அரசாங்க வருமானங்கள் சம்பந்தமான மோசடிமிக்க செயற்பாடுகள் மற்றும் அதற்கு சமமான குற்றங்கள் தொடர்பிலான வழக்கு நடவடிக்கைகளை துரிதமாக பூர்த்தி செய்வது நடைமுறை ரீதியில் கடினமாக அமைந்துள்ளது. ஆதலால், பொது சொத்துக்களுக்கு எதிராக செய்யப்படும் குற்றங்கள், வௌ்ளைப் பணமாக்கல், பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குதல், குற்றவியல் நம்பிக்கை துரோகம் பொதுச் சொத்தை முறைக்கேடாக பயன்படுத்துதல், திட்டமிட்ட குற்றங்கள், இலஞ்சம் மற்றும் ஊழல் முறைப்பாடுகள், அதிஉட்சிக்கல் வாய்ந்த நிதி குற்றங்கள் தொடர்பிலான வழக்கு நடவடிக்கைகளை துரிதமாக விசாரிக்கும் பொருட்டு விசேடமாக ஒதுக்கப்பட்ட மேல் நீதிமன்றமொன்றைத் தாபிப்பது பொருத்தமானதென கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, பிரதம நீதியரசரினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மூவர் அடங்கிய மூன்று நியாயசபைகளைக் கொண்ட மேல் நீதிமன்றமொன்றை அரசியலமைப்பின் 105(1)(இ) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் கீழ் தாபிப்பதற்கும் திட்டவட்டமாக விதித்துரைக்கப்படும் குற்றங்கள் சம்பந்தமான வழக்கு நடவடிக்கைகளை சட்டமா அதிபரின் கோரிக்கையின் மீது அல்லது பிரதம நீதியரசரினால் அவருடைய தற்றுணிபின் பேரில் இந்த மேல் நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்துவதற்கும் இந்த மேல் நீதிமன்றத்தின் கட்டளைக்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்கு நேரடியாக மேன்முறையீட்டினைச் செய்வதற்கும் ஏற்பாடுகளைச் செய்து தேவையான சட்டங்களை வரைவதற்காக சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.