• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் 'அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2017 முக்கிய நிகழ்வுகளும் 2018 எதிர்பார்ப்புகளும்' தொடர்பிலான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- இலங்கை மத்திய வங்கியினால் 2017 ஒக்ரோபர் மாதம் வரை இலங்கை பொருளாதாரத்தின் சொத்துத் துறை, வௌிநாட்டுத் துறை, அரசாங்க நிதித்துறை மற்றும் நாணயம் ஆகிய துறைகளின் செயலாற்றுகையை உள்ளடக்கி வௌிப்படுத்தியுள்ள 'அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2017 முக்கிய நிகழ்வுகளும் 2018 எதிர்பார்ப்புகளும்' எ்னனும் தலைப்பிலுள்ள அறிக்கையை 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட ஆவணத்திற்கு ஒருங்கிணைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.