• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீதிக்கான மனை தொடர்பான கருத்திட்டம்
- கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டடத்தொகுதியின் மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றிற்காக தற்போது பயன்படுத்தப்படும் கட்டடங்களில் இடவசதி மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளதோடு, அவை பழைமை வாய்ந்தவையாக காணப்படுவதன் காரணமாக ஆபத்துமிக்க நிலைமையும் தோன்றியுள்ளது. அதேபோன்று மீயுயர் நீதிமன்ற கட்டடத்தொகுதியில் தாபிக்கப்பட்டுள்ள நீதித்துறை சார்ந்த பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கும் போதுமான கட்டட வசதிகளை வழங்க வேண்டியுள்ளது. இதற்கமைவாக 40 நீதிமன்ற மண்டபங்களை உள்ளடக்கிய நீதிமன்ற கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல், நீதி அமைச்சுக்கான கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல், நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தை விருத்தி செய்தல் மற்றும் சட்டத்தரணிகளைப் பயிற்றுவிக்கும் சட்ட நிலையமொன்றை நிருமாணித்தல் என்பவற்றிற்காக 'நீதிக்கான மனை' கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள அபிவிருத்தியாளரொருவரை / ஒப்பந்தக்காரரொருவரை நாட்டில் தற்போது அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு ஒப்பந்தக்காரர்களிலிருந்து போட்டி அடிப்படையில் தெரிவு செய்யும் பொருட்டு நீதி அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.