• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தளம் நிலக்கரி மின் நிலையத்தின் அவசர தேவைகளுக்கு எதிர்பாரா சந்தர்ப்பக் கொள்வனவுகளின் கீழ் நிலக்கரி கொள்வனவு செய்தல்
- புத்தளம் நிலக்கரி மின் நிலையத்திற்கு உடனடியாகத் நிலக்கரி வழங்கும் தேவையினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அமைச்சரவையின் தழுவு அங்கீகாரத்தின் கீழ், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவின் அங்கீகாரத்தின் மீது நிலக்கரி அவசரக் கொள்வனவு வழிமுறைக்கு அமைவாக கொள்வனவு செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக இந்த மின் நிலையத்திற்கு தேவையான 300,000 மெற்றிக் தொன் நிலக்கரியினை பதிவு செய்யப்பட்டுள்ள வழங்குநர்களிடமிருந்து அனுசரணையான ஆகக்குறைந்த விலையினை முன்வைத்துள்ள Swiss Singapore Overseas Enterprises Pte Ltd. நிறுவனத்திடமிருந்து மெற்றிக் தொன் ஒன்று 87.97 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் FOBT விலைக்கு கொள்வனவு செய்வது சம்பந்தமாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.