• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்படுத்தல் மூலதன நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெலவல பயிற்சி நிலையத்தினையும் ஏனைய கட்டடங்களையும் நிருமாணித்தல்
- கட்டணமின்றி பெற்றுக் கொள்ளப்படும் நீர் பாவனையை முறைப்படுத்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நீர் தேவை வசதிகளை விருத்தி செய்வதும் முகாமிப்பதும் பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்படுத்தல் மூலதன நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். இந்த நிகழ்ச்சித்திட்டதின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தெலவல பயிற்சி நிலையத்தை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, கட்டணமின்றி பெற்றுக் கொள்ளப்படும் நீர் பாவனையை ஒழுங்குறுத்தும் கருத்திட்டம் தொடர்புபட்ட பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களையும் நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் ஏனைய உத்தியோகத்தர்களையும் பயிற்றுவிப்பதற்கு இந்த நிலையத்தை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைவாக நான்கு மாடிகளைக் கொண்ட பயிற்சி நிலையமொன்றையும் ஐந்து மாடிகளைக் கொண்ட விடுதிக் கட்டடமொன்றையும் சிற்றுண்டிச்சாலை யொன்றையும் நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் M/s. Sierra Construction (Pvt) Ltd. நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.