• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீடமைப்பு மற்றும் மனித குடியிருப்பு அபிவிருத்திக்காக குறைவான பயன்பாடுடைய காணிகளை பயன்படுத்துதல்
- வயல் காணிகள், வேறு விவசாய காணிகள் உட்பட வன ஒதுக்கங்களை பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டு'ள்ள சட்டங்கள் காரணமாக குறைவான பயன்பாடுடைய சில காணிகளை அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்துவதில் தடைகள் எழுந்துள்ளமை பற்றி அவதானிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக துரிதமாக நகர மயமாகும் பிரதேசங்களில் மனித குடியிருப்புகளின் அபிவிருத்திக்காக காணிகளை பயன்படுத்தும் போது அளவையாளரின் வரை படங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காணித் துண்டொன்றின் பெயர் 'வெல', 'கும்புற', 'தெனிய' என்னும் சொற்களில் முடிவுற்றிருப்பின் அத்துடன் அந்தக் காணிகள் உண்மையாகவே பயிர்செய்ய முடியாதிருந்தாலும் அக்காணிகளை வீடுகளை நிருமாணிப்பதற்காக பயன்படுத்த இயலாமற்போயுள்ளது. இதன் காரணமாக குறைவான பயன்பாடுடைய காணிகளின் அபிவிருத்தி நோக்கங்களுக்காக விடுவிக்கும் பொருட்டு துரிதமான வழிமுறையொன்றை தயாரித்து சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் சிபாரிசின் பிரகாரம், அத்தகைய குறைவான பயன்பாடுடைய காணிகளை வீடுகளை நிருமாணிக்கும் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் போது அதற்கு முன்னுரிமை வழங்கி செயலாற்றுவதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் விசேட உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமித்து உரிய நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுடன் துரிதமாக வௌிக்கள பரிசோதனைகளை செய்ததன் பின்னர் ஏற்புடைய அங்கீகாரங்களை வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினாலும் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.