• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வருமான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள 2031/49 ஆம் இலக்கமுடைய வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- உரிய கைத்தொழிலாளர்களின் கோரிக்கையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள கொள்கை தீர்மானத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட சுங்க குறியீட்டு முறைகளின் விபரங்களை திருத்துவதற்கும் அவற்றின் புதிய உப பிரிவுகளை உருவாக்குவதற்குமாக 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க வருமான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள 2017-08-11 ஆம் திகதியிடப்பட்டதும் 2031/49 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.