• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு சார்பில் கொரிய குடியரசுடனான கட்டமைப்பு உடன்படிக்கை
- இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையில் நிலவும் நட்புறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை மேலும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் அபிவிருத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு 2017-2019 வரையிலான காலப்பகுதிக்குள் 500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு சமமான கடன் தொகையொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. கொரிய அரசாங்க கடன் உதவி சிறந்த சலுகை வட்டி விகிதாசாரத்தின் கீழ் வழங்கப்படுவதோடு, இந்த கடன் தொகையை மீளச் செலுத்துவதற்கு பத்து (10) வருடங்களைக் கொண்ட சலுகைக் காலம் அடங்கலாக நாற்பது (40) வருடங்கள் உரியதாகும்.

இதற்கமைவாக, கொரியாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தினால் வழங்கப்படவுள்ள மேற்போந்த கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக கொரிய குடியரசு அரசாங்கத்துடன் கட்டமைப்பு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.