• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் தொழினுட்ப துறை சேவைக்கால பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான ஒத்துழைப்பு உடன்படிக்கை
- யப்பான் கொண்டுள்ள உயர் தொழினுட்ப ஆற்றல், தொழில் முறைகள் மற்றும் அறிவு என்பவற்றை இலங்கைக்காக பெற்றுக் கொள்ளும் தொழினுட்ப துறைசார்ந்த சேவைக்கால பயிலுநர்களை இருநாடுகளுக்கும் இடையில் மாற்றிக் கொள்ளும் உட்பட, சர்வதேச ஒத்துழைப்பினை மேம்படுத்தும் நோக்கிலும் நாட்டின் புலம்பெயர் ஊழியர்களுக்கு இதன்மூலம் கிடைக்கும் நன்மைகளை கருத்திற் கொண்டும் யப்பான் நீதி அமைச்சு, வௌிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் சுகாதாரம், தொழில் மற்றும் நலன்புரி அமைச்சுக்கும் இலங்கை வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சுக்கும் இடையில் தொழினுட்ப துறை சேவைக்கால பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.