• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி மாநகர சபையின் மேல்மாடி வாகனத்தரிப்பிடத்தை விருத்தி செய்தல்
- திறமுறை நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் கண்டி நகரத்தில் மாநகர சபையின் மேல் மாடி வாகனத் தரிப்பிடத்தை விருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்த ஒப்பந்தத்தை வரியின்றி 654.11 மில்லியன் ரூபாவுக்கு M/s. Sierra Construction (Pvt) Ltd. நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.