• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் மேற்குப் பிரதேசத்தில் ஆறு (06) இலகுரக புகையிரத போக்குவரத்து பாதைகள் பற்றிய முன் சாத்திய தகவாய்வு மற்றும் சாத்தியத் தகவாய்வு சார்பில் மதியுரைச்சேவை ஒப்பந்தத்தை வழங்குதல்
- கொழும்பு மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் தற்போது நிலவும் கடும் வாகன நெரிசல் மற்றும் பொதுப் போக்குவரத்து முறைமை தொடர்புபட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாக புதிய போக்குவரத்து முறையொன்றாக இலகுரக புகையிரத போக்குவரத்து முறைமையானது அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் கீழ் ஆறு (06) இலகுரக புகையிரத போக்குவரத்து பாதைகளை கொழும்பு மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் நிருமாணிக்கப்படவுள்ளதோடு, அரசாங்க - தனியார் கூட்டு வழிமுறையின் கீழ் இந்தக் கருத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த ஆறு (06) இலகுரக புகையிரத போக்குவரத்து பாதைகளை நிருமாணிப்பதற்காக முன்சாத்தியத்தகவாய்வினை மேற்கொள்ளும் பொருட்டு மதியுரை நிறுவனமொன்றை தெரிவு செய்வதற்கு சர்வதேச போட்டிக் கோள்வி கோரப்பட்டுள்ளது. இதன் சார்பில் 05 சர்வதேச நிறுவனங்கள் பிரேரிப்புகளை முன்வைத்துள்ளதோடு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் உரிய மதியுரைச் சேவைகளை வழங்கும் ஒப்பந்தத்தை 202 மில்லியன் ரூபாவுக்கு கொரியாவின் M/s. Seoyoung Engineering Co. Ltd., (SYE) Saman Corporationநிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.