• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- அரசாங்க பல்கலைக்கழகங்களில் தற்போது நிலவும் இட மற்றும் வசதிகளை மேம்படுத்தும் தேவையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த பல்கலைக்கழகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. இதற்கமைவாக பின்வரும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி கருத்திட்டங்களை 2018-2019 காலப் பகுதியினுள் 380 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மின் மற்றும் மின்னணு பொறியியல் கற்கைப் பிரிவை விரிவுபடுத்தல்.

* அநுராதபுரம், இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வௌிநாட்டு மாணவ பிக்குமார்களுக்காக மூன்றுமாடி விடுதி கட்டடமொன்றை நிருமாணித்தலும் இந்த பல்கலைக்கழகத்தின் சுற்றுலா விடுதியை விருத்தி செய்தலும்.

* கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பதவியணியினருக்கான உத்தியோபூர்வ இல்லங்களை நிருமாணித்தல் .