• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலர் காலநிலை காணப்படும் பிரதேசங்களில் நிலக்கீழ் நீர்வளங்கள் அபிவிருத்திக்கென நிலக்கீழ் நீரியல் ஆய்வு உபகரணங்களையும் துளையிடல் இயந்திரங்களையும் பெற்றுக் கொள்ளல்
- இலங்கையில் நீர் தேவையை நிறைவு செய்வதற்கு நிலத்திற்கு மேல் மட்டத்திலுள்ள நீர்வளங்களும் அதேபோன்று நிலக்கீழ் நீர்வளங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. காலநிலை மாற்றம் காரணமாக இலங்கையில் நிலவும் உலர் காலநிலை காரணமாக முக்கியமாக யாழ்ப்பாணம், அநுராதபுரம், பொலன்நறுவை, மொனராகலை, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் நீர்த் தேவைகளை நிறைவு செய்வதற்கு பெரும்பாலும் நிலக்கீழ்நீர் வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையில் நிலக்கீழ் நீர் அபிவிருத்தியின் பொருட்டுள்ள முன்னுரிமை நிறுவனமானது நீர்வளங்கள் சபையாவதோடு, இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான துளையிடும் இயந்திரங்கள் பெரும்பாலானவை 20 வருடங்களுக்கு மேலாக பலமை வாய்ந்தவையாகையினால் வரட்சியினால் பாதிக்கப்படும் பிரதேசங்களில் நிலக்கீழ் நீர்வள அபிவிருத்தி மற்றும் விருத்தி என்பவற்றுக்கான வசதிகளைச் செய்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்குவதற்கும் நிலக்கீழ் நீர்வளப் பாவனையை ஒழுங்குறுத்தலுடன் மேற்கொள்வதற்குமாக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.