• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1981 ஆம் ஆண்டின் 75 ஆம் இலக்க கரும்பு ஆராய்ச்சி நிறுவன சட்டத்தை திருத்துதல்
- கரும்பு செய்கை துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு வசதிகளை வழங்கும் நோக்கில் 1981 ஆம் ஆண்டின் 75 ஆம் இலக்க கரும்பு ஆராய்ச்சி நிறுவன சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் விடயநோக்கெல்லையை மேலும் விரிவுபடுத்தி, கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிகளை ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மாத்திரம் வரையறுக்காது இந்த துறையின் அபிவிருத்திக்காகவும் விரிவுபடுத்துவதற்கு இயலுமாகும் வகையில் கரும்பு ஆராய்ச்சி நிறுவன சட்டத்தை திருத்தும் பொருட்டு பதில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்‌ஷ்மன் வசந்த பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.