• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விமான நகர அபிவிருத்திக்கான காணிகளைப் பெற்றுக் கொள்ளுதல்
- கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஏக்கல பிரதேசமானது இலங்கையில் கைத்தொழில்துறை உற்பத்திகளுக்கு பிரதான பங்களிப்பை வழங்குகின்றது. மேல்மாகாண பிராந்தியத்தின் மாநாகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விமான நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் பின்வரும் உபகருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது.

* பெறுமதி சேர்க்கப்பட்ட கைத்தொழில்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசமொன்றைத் தாபித்தல்;

* சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசமொன்றைத் தாபித்தல்;

* வர்த்தக மற்றும் பொழுதுபோக்கு செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசமொன்றைத் தாபித்தல்;

* ஊடக நகரம்; அத்துடன்

* நடுத்தர வகுப்பு வீடமைப்பு மற்றும் பொது பொழுதுபோக்குகள்.

மேற்போந்த உப கருத்திட்டங்களை உள்ளடக்கி விமான நகர கருத்திட்டமானது தனியார் அரச பங்குடமை அடிப்படையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது அதற்கிணங்க, இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனத் திற்குச் சொந்தமான 80 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.